முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
மன்னாரிலுள்ள காணிப்பிரச்சினை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் றிசாட் பதியூதீன் முன்னிலையாகியிருந்தார். சுமார் 4 மணிநேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து அவர் வெளியேறியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக றிசாட் பதியூதீனின் சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், றிசாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளமை கோட்டாபய அரசாங்கத்தின் பழிவாங்கல் படலமா என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்;டுள்ளமை குறிப்பிடத்தக்கது.