T24 Tamil Media
இலங்கை

அரசியலிலிருந்து ஓய்வுப் பெறத் தயாராகும் ஜோன் அமரதுங்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை என்றால் அரசியலிலிருந்து ஓய்வு பெற முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தயாராகி வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலில் தோல்வியடைந்தவர்களைத் தேசியப் பட்டியல் ஊடாக நியமிப்பதில்லை என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் என்று ஜோன் அமரதுங்க, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவூட்டியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் ஜோன் அமரதுங்கவின் பெயரே முதலில் இடம்பெற்றுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே கிடைத்தது.

பொதுத் தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவரை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்கவைப் போல் ஜோன் அமரதுங்கவும் கடந்த 1977ஆம் ஆண்டு முதலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவர். 43 ஆண்டுகள் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more