நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து வெளியில் செல்ல அரசாங்கம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
ஊரடங்கு காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து வெளியில் செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க தேசிய அடையாள அட்டையின் 1மற்றும் 2 ஆகிய இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.
அத்துடன் 3 அல்லது 4 ஆகிய இலக்கங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் செவ்வாய்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.
அத்துடன்இ 5 அல்லது 6 ஆகிய இலக்கங்களில்இ தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் புதன்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.
அத்துடன்இ 7 அல்லது 8 ஆகிய இலக்கங்களில்இ தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வியாழக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும்.
அத்துடன்இ 9 அல்லது 0 ஆகிய இலக்கங்களில்இ தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.