T24 Tamil Media
இலங்கை

5000 ரூபாய் கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களை முறையாகச் சென்றடையவில்லை -பழனி திகாம்பரம் குற்றச்சாட்டு.

அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வருகின்ற 5000 ரூபாய் கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களை முறையாகச் சென்றடையவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்இ பிரதேசசபை உறுப்பினர்களால் இவ்விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த பழனி திகாம்பரம்,

தற்போது அரசாங்கத்தால் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கொடுப்பனவுகள் பெருந்தோட்ட மக்களை முறையாகச் சென்றடையவில்லை. இந்நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு மாதத்திற்கு சுமார் 10 நாட்கள் மாத்திரமே நிர்வாகத்தினரால் வேலை வழங்கப்படுகிறது. காரணம் தற்போது வெயில் காலம் என்பதானாலாகும்.

கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சென்ற இளைஞர்கள் பலர் தொழில் வாய்ப்பினை இழந்துள்ளனர். அவ்வாறானவர்களுக்கும் இந்த கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை. இவர்கள் மாத்திரமின்றி மேசன் தொழில் செய்பவர்கள்இ தினக்கூலி தொழில் செய்பவர்களுக்குக் கூட இந்த கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறவில்லை.

இப்பிரதேசங்களிலுள்ள பிரதேசசபை உறுப்பினர்கள் தமக்கு தேவையானவர்களை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மாத்திரமே இந்த கொடுப்பனவை வழங்குகின்றனர். உண்மையில் தேவையுடைய மக்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. பெருந்தோட்ட மக்கள் வருமையிலுள்ளனர். எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தேர்தலுக்குச் செல்வதும் பொறுத்தமாகாது. வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னரே தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அரசாங்கம் இவை அனைத்திலும் கவனம் செலுத்தி கொடுப்பனவுகள் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more