அமைச்சர் விமல் வீரவன்ஸ அரசியலில் தோல்வியடைந்த சக்திகளுடன் நாம் சேர்ந்துகொள்ள தயாரில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
என்னைப் பற்றியும், நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் தெரிவித்ததை நான் பார்த்தேன்.
முன்னாள் அமைச்சர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட எதிர்க்கட்சியில் திவாலானவர்கள் நிற்கும் அளவுக்கு நாங்கள் திவாலாகவில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.அத்துடன் எதிர்க்கட்சியின் பாத்திரத்திற்காக கூட நிற்க முடியாத ஒரு குழந்தைத்தனமான அரசியலை முன்னெடுப்போம் என்று நினைப்பது வேடிக்கையானது.
எங்களை நம்பிய அனைத்து இலங்கையர்களின் குறிக்கோள் மற்றும் 69 இலட்சம் வாக்காளர்களிலும் நம்பிக்கையை செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அத்துடன் எங்கள் செயற்பாட்டையும் கருத்துகளையும் தவறாகப் புரிந்து கொண்ட அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.