இலங்கை ரூபாவின் மதிப்பானது அமெரிக்க டொலருக்கு எதிரான குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய பரிமாற்றத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்கும் விலை 203.50 சதமாகும். வாங்கும் விலை 199.21 சதமாகும்.
மேலும் கடந்த மார்ச் மாதம் முதற்கொண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.