பொலனறுவை மாவட்டம் கொரோனா தொற்று பரவும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலனறுவையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நேற்று 12 கிராமங்கள் முடக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலனறுவை மாவட்டத்தை முடக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலனறுவை மாவட்டத்தின் லங்காபுரி பிரதேசத்திற்கு உட்பட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலனறுவை அபயபுர கிராமத்தில் உள்ள 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலனறுவை மாவட்டத்திற்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.