இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இவ்வாறு பரிசோதனைக்குற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தரச்சான்று நிறுவகம் தெரிவித்துள்ளது.
ஆகவே தரச்சான்று நிறுவனத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வசமிருந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.