இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், அறிவித்தலின் பிரகாரம் காணி அமைச்சின் கீழ் 7 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன் உள்நாட்டலுவல்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சுகள் மற்றும் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அமைச்சின் விடயம் மற்றும் சமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பற்றியும் திருத்தப்பட்டுள்ளன.
அத்துடன் தேசிய பாதுகாப்பு மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சிற்கு உரித்தான நிறுவனங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமின்றி புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் காணி அமைச்சின் கீழ் 7 நிறுவனங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, அளவையியல் படமாக்கல் நிறுவனம், நில அளவைச்சபை, காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம், காணி குடியமர்வு திணைக்களம் ஆகியன காணி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.