பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுடன் ஒருங்கிணைந்து COVID-19 பரிசோதனைகளை ஒரு நாளைக்கு 2000 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்காக அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுகாதாரத் துறைத் நிபுணர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மருத்துவ பீட தலைவர்கள் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்களும் கற்பித்தல் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி செய்வதற்காக தங்களது சொந்த பி.சி.ஆர் கருவிகளைக் கொண்டுள்ளன.
எனவே பி.சி.ஆர் சோபரிசோதனைகளை கூடுதலாக கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகம், பேராதெனிய பல்கலைக்கழகம், கெளனியா பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் மற்றும் அறிவியல் பீட ஆய்வகங்கள் ஆகியவற்றில் உயர் கல்வி, தொழில்நுட்ப அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட உள்ளன.
கலந்துரையாடலில் உயர் கல்வி, தொழில்நுட்பம் அமைச்சர் பந்துலா குணவர்தன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோரும் கலந்து கொண்டனர். உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, COVID-19 க்கான சோதனையை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் இருவரும் வலியுறுத்தினர்.
இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான ஜனாதிபதி செயலணி மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பணியாளர்கள் COVID-19 க்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அவர்கள் யாருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யயப்படவில்லை.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதால், அந்த ஊழியர்களின் சுகாதார நிலை ஒரு வழக்கமான அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.