இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் வீதம் அதிகரித்துள்ள காரணத்தினால் பழைய தீர்மானங்களை இனியும் முன்னெடுக்க முடியாது. ஊரடங்கை தளர்ப்பதன் மூலமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்கிறது அரச மருத்தவ அதகாரிகள் சங்கம்.
தனி நபர்கள் தனி சமூகத்தின் இடையில் வைரஸ் பரவ இடமளித்தால் அடுத்த மாத இறுதிக்குள் நாடு மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் அவ்வாறான அச்சம் நிலவுகின்றது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்ற நிலையில் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதுஇ அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே இவ்வாறான விடயங்களை தெரிவித்துள்ளார்.