சஹ்ரானை பின்பற்றும் அடிப்படைவாத கருத்துக்களை க,பொ,த சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு பரப்பிய குற்றச்சாட்டில் ஒலுவில் பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒலுவில் பகுதியினை சேர்ந்த 30 மற்றும் 39 வயதுடையவர்களே இவ்வாறு கைது செயப்படுள்ளார்.
குறித்த நபர்கள் கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களை இலக்கு வைத்து அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த வகுப்பானது மாணவர்களின் விருப்பம்மின்றி 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்