இலங்கையின் எதிர்கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
இன்றையதினம் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இக்குற்றச்சாட்டினை சபையில் முன்வைத்தார்.
இக்காரணத்திற்காகவே வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.