இலங்கையின் மத்துகம பிரதேச செயலக பிரிவின் 771 பொன்துபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக குறித்த பகுதி அண்மை நாட்களாக தனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.