சர்வதேச கிரிக்கெட் சபையின் ஐசிசி விருதுகள் நாளை அறிவிக்கப்படுகிறது.டெஸ்ட் ,ஒருநாள் தொடர் மற்றும் ரீ டுவண்டிஆகிய போட்டிகளின் சிறந்த வீரர் நாளை தெரிவுசெய்யப்படும்.

இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. குமார் சங்கரக்கார ஒருநாள் அணியில் இடம்பிடித்திருப்பது இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சோபர்ஸ் விருது வழங்கப்படும். முன்னாள் வீரர்களை கொண்ட குழு, பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனத்தினர் ஆகியோர் சிறந்த வீரரை தெரிவு செய்யவுள்ளனர்