வீட்டில் இருந்தபடியே ரூபா 9 கோடி சம்பாதித்து சாதித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.
இன்ஸ்ட்ராகிராம் மூலம் கடந்த மார்ச் 12 தொடக்கம் மே 14 வரை அதிக வருமானத்தை ஈட்டியுள்ளார் விராட் கோலி.
இவ்வருடம், அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை அட்டெய்ன் நிறுவனம் வெளியிட்டுள்ளது இக்காலத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 43 கோடி சம்பாதித்து விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இதில், கோலி 6 ஆம் இடம் பிடித்துள்ளார்.
முதல் 10 வீரர்களில் இவர் மட்டுமே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்ட்ராகிராம் தளத்தில் நிறுவனங்கள் பற்றிய விளம்பரப் பதிவுகளின் மூலம் அவர் இந்த வருமானத்தைப் பெற்றுள்ளது.