T24 Tamil Media
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த யோர்க்கர் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தான் – ஜஸ்ப்ரிட் பும்ரா புகழாரம்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஜஸ்ப்ரிட் பும்ரா, யோர்க்கர் போடுவதில் அண்மைக்காலமாக சிறப்பானவராக கருதப்படுகிறார். அத்துடன், தற்போதைய ஐசிசி தரவரிசையிலும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.


இந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் மாலிங்க குறித்து ஜஸ்ப்ரிட் பும்ரா சில பதிவுகளை பதிவிட்டுள்ளார்.


இதுகுறித்து பும்ரா கூறுகையில், ‘லசித் மாலிங்க தான் உலகின் மிகச்சிறந்த யோர்க்கர் பந்துவீச்சாளர். அவருடன் நீண்ட நாட்கள் சேர்ந்து விளையாடியது எனக்கு சாதகமான விடயமாக அமைந்தது. மும்பை அணிக்காக விளையாடிய போது மாலிங்க எப்பொழுதும் எனக்கு உதவி செய்வார்.


லசித் மாலிங்க நீண்ட காலமாக யோர்க்கர் பந்து வீசுவதில் சிறந்து விளங்குவதாகவும், அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் பும்ரா பதிவிட்டுள்ளார்.


இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தின் மற்றொரு பகிர்வில், ‘வாரத்தின் ஆறு நாட்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இப்படி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருப்பது எந்தளவு கைகொடுக்கும் என தெரியவில்லை.

அதனால் இந்த இடைவேளைக்கு பின் பந்துவீசும் போது, என் உடல் எப்படி ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை.
கிரிக்கெட் மீண்டும் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரியவில்லை. என தெரிவித்தார்.

Related posts

ஸ்கூல் வீரர்களை விட மோசமாக ஆடுகிறார்கள், அணி நிர்வாகத்தையும் வீரர்களையும் மாற்றவேண்டும்-கோவமடைந்த அக்தர்.

T24 News Desk 2

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் தள்ளிவைப்பு.

T24 News Desk 4

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் போட்டி இன்று.

T24 News Desk 4

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் மார்ச் 25ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.

T24 News Desk 4

வீட்டில் இருந்தபடியே 9 கோடி ரூபா சம்பாதித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.

T24 News Desk 4

வில்லியம்சன் அபாரம் சன் றைசர்ஸ் வெற்றி.

T24 News Desk 4

வருண் சக்கரவர்த்தி தனது நீண்டகால தோழியை மணந்தார்

T24 News Desk 2

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more