13 ஆவது ஐ.பி.எல். ருவென்ரி – 20 போட்டி மார்ச் மாதம் நடக்க இருந்தது. ஆனால், வைரஸ் தொற்று காரணமாக போட்டி நடக்கவில்லை.
இதனிடையே அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடக்கவிருந்த ருவென்ரி – 20 உலகக் கிண்ணம் தள்ளிப்போகும் நிலையுள்ளது.
இந்த இடைவெளிக்குள் ஐ.பி.எல். போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது.
எனினும், இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் அங்கு போட்டியை நடத்தும் சூழ்நிலை இல்லை. இதனால், தொடரை வெளிநாட்டில் நடத்தவும் திட்டமிடப்படுகிறது.
இது குறித்து, இந்திய கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்துவதில் சாத்தியமான எல்லா அம்சங்களும் பரிசீலிக்கப்படுகிறது. ஒருவேளை ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டிற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுவும் நடக்கலாம்.
ஆனால் அது கடைசிகட்ட முயற்சியாகவே இருக்கும். வெளிநாட்டில் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அது போல் மீண்டும் நடத்த முடியும். ஆனாலும் இந்தியாவில் ஐ.பி.எல்.
போட்டியை நடத்துவதற்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றார்.
இல் தென்னாபிரிக்காவிலும், 2014 இல் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.