செம்பியன்பற்று பகுதியில் சட்ட விரோதமாக வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வெவ்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பான வகையில் வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 45 லீற்றர் வடிசாராயம் மற்றும் அதனைத் தயாரிப்பதற்கான உபகரணமும் கைப்பற்றப்பட்டது.
அத்தோடு மற்றொரு சம்பவத்தில் 65 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து வடிசாராயம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்கள் இருவரும் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப் படையின் வடமராட்சிக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமார தலைமையிலான அணி இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.