T24 Tamil Media
இலங்கை செய்தி

யாழ்ப்பாண மக்களிற்கான முக்கிய அறிவித்தல்

யாழ். நகரின் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடன் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

குறிப்பாக காய்ச்சல், தொண்டை நோ, தடிமன், தும்மல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் வசிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தோடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

யாழ். கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து திரையரங்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எனவே அந்த திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்களாக சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனாலேயே யாழ். மாநகரின் கார்கில்ஸ் கட்டடத்தில் உள்ள திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more