வேலையின்மை பிரச்சினை குறித்து சித்த மருத்துவ பட்டதாரிகள் இன்று நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சித்தமருத்துவ பட்டதாரிகள் கடந்த நான்கு வருடமாக தமது பட்டத்தினை முடித்த மாணவர்கள் தாம் பட்டதாரி நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்பாட்டப்பேரணி இடம்பெற்றது. தமது கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பார்ட்ட பேரணியானது சித்தமருத்துவ பீடத்திலிருந்து சித்த மருத்துவ வைத்தியசாலை வரை இடம்பெற்றது. இதன் படி தமது போராட்டத்திற்கு சித்த மருத்துவ மாணவர் ஒன்றியம் ஆதரவு தந்த போதிலும் மாணவர்களை வெளியே விடாது சித்த மருத்துவத்துறை தடுத்து நிறுத்தியதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினார்கள்.