இன்று நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.
கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.