T24 Tamil Media
இலங்கை செய்தி

தியாக தீபம் திலீபனிற்கு அஞ்சலி செலுத்திய பேரணியினர்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்தவேளை, இங்கு தீபச்சுடரேற்றி அஞ்சலியினை செலுத்தியுள்ளனர்.

அதுமட்டுமன்றி, அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.

ஐந்தாம் நாளான இன்று காலை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு யாழ்ப்பாணத்துக்கு பேரணியை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரிலும் வரவேற்பளிக்கப்பட்டு தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகருக்குள் வரவேற்கும் வகையில் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் பேரணிக்கு வரவேற்பளித்தனர்.

வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடாத்தி இன்றையதினம் வெற்றி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more