T24 Tamil Media
இலங்கை செய்தி

வவுனியாவை சேர்ந்த இளைஞரின் வங்கி கணக்கில் 1 லட்சம் கோடி பணம்

வவுனியாவில், ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பண விவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இவர்கள் மடக்கிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய சிலர் தாம் மத்திய வங்கியில் இருந்து கதைப்பதாக தெரிவித்ததுடன், அவரது வங்கிக்கணக்கில் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் அமெரிக்க நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதனை வெளியில் எடுப்பதற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்து, 7500 கோடியை தங்களுக்கு தருமாறும் 2500 கோடியை குறித்த இளைஞருக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அந்த இளைஞரும் கடந்த வருடம் 6 ஆம் மாதத்திலிருந்து அந்த குழுவினருடன் இணைந்து கொழும்பில் தங்கிவந்துள்ளார். இதேவேளை கொழும்பில் வைத்து அவரது வங்கிகணக்கில் ஒரு இலட்சம்கோடி மதிப்பிலான இலங்கைரூபாய் வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக அந்த குழு இளைஞரிடம் தெரிவித்தது. இருப்பினும் பணம் எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் அவர் வவுனியாவிற்கு வந்துள்ளார்.

தொடர்ந்து பணத்தை மீட்பதற்காக கொழும்பு செல்வதாக நேற்றையதினம் அந்த இளைஞரை மீண்டும் தொடர்புகொண்டு தெரிவித்து அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர். குறித்த இளைஞர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளைஞனின் நண்பன் வழங்கிய தகவலிற்கமைய வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிற்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டது. பொலிசார் அந்த குழுவினரை கைதுசெய்தனர். தொடர்ந்து மேலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more