கடந்த 18-01-2021 அன்று தொல்பொருள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் மக்களது பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அகழ்வாராட்சி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் ஒரு வார காலத்திற்கு பின்னர் அப்பகுதிக்கு வருகை தந்த அகழ்வாராச்சியாளர்கள் இராணுவத்தினரையும் இணைத்து அகழ்வாராட்சி பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த குருந்தூர் மலை பகுதியிலே லிங்க வழிபாடுகள் இடம்பெற்றமைக்கான பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக குறித்த பகுதியில் பல மூத்தவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் முகமாக குருந்தூர்மலைப் பகுதியில் இடம்பெறும் அகழ்வாராச்சி பணிகளின் போது ஆதி லிங்கம் என கருதப்படும் லிங்க உருவத்தை ஒத்த சிலை ஒன்று வெளித்தோன்றியுள்ளது.
இருப்பினும் இவ் உண்மைகளை தொடர்பில் அகழ்வாராச்சி பணிகளை பார்வையிட்டு வற்றை அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் குறித்த புகைப்படங்கள் முகநூலில் வெளியாகி வைரலாகி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.