இலங்கையின் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சானது, தேசிய பாதுகாப்பு – அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனியான இராஜங்க அமைச்சாகவும், உள்நாட்டலுவல்களுக்கு தனியான இராஜாங்க அமைச்சராகவும் வேறாக்கப்பட்டுள்ளது.
இந்த இருவேறு இராஜாங்க அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்நாட்டலுவல்கள் இராஜங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை ஜனாபதிபதியால் நியமிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதியிடம் அவர் பெற்றுக் கொண்டார்.
இது வரை காணப்பட்ட தேசிய பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சானது, தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் என இரு இராஜாங்க அமைச்சுக்களாக செயற்படவுள்ளது.