ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) இல் வசித்துவரும் பிரபல கேரள தொழிலதிபர் தற்செயலாக மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்ட ஏரிஸ் குழுமத்தின் (Aries Group ) நிறுவனர் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சோஹன் ராய் (Sohan Roy) இஸ்லாமிற்கெதிரான உணர்வைத்தூண்டுவதற்கு கொரோனா வைரஸைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து சனிக்கிழமை பேஸ்புக் நேரடி வீடியோவில் மன்னிப்பு கோரினார்.
சோஹன் ராய் அவர்களால் மலையாளத்தில் முட்டாளின் வாழ்க்கை என்ற தலைப்பில் சிறு கவிதை ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அக்கவிதையானது மொழிபெயர்க்கப்பட்டால், “மத எண்ணங்கள் மனிதர்களைக் குருடர்களாக்கி, பாதையில் தடைகளை ஏற்படுத்தும்போது, போதகர் அறியாமையைக் கற்பிக்கும்போது, கிருமிகளைத் தடுக்க நாம் சுவர்களைக் கட்ட வேண்டியிருக்கும் போது, அந்த முட்டாள்கள் பிளவுகளை உருவாக்குவதன் மூலம் அவற்றைப் பரப்புகிறார்கள். ”
கவிதை எந்த மதத்தினையும் குறிப்பிடவில்லை என்றாலும், மேல்குறிப்பிட்ட வசனங்கள் உரைக்கப்படும்போது, அதற்கான காட்சியாக, ஒரு முஸ்லீம் போதகர், குர்தா பைஜாமா மற்றும் தொப்பிகளை அணிந்த கண்கட்டப்பட ஆண்கள் கூட்டத்தை வழிநடத்துவதுபோன்று அமைந்துள்ளது.
இந்த காட்சித்சித்தரிப்பு கேரளாவை தளமாகக் கொண்ட தனது படத்தொகுப்பாளரின் தவறு என்று ராய் கூறியுள்ளார்.
“வேண்டும் என்று இடியான தவறான ஒரு காட்சியை உள்ளடக்குவது நோக்கமாக இருந்ததில்லை. இது ஒரு நேர்மையான தவறு. என்ன நடந்தது என்பதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்தவொரு மத உணர்வையும் நான் அறியாமல் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். மக்கள் புண்படுத்தப்பட்டதை அறிந்தவுடன் நான் ஒரு பேஸ்புக் லைவ் வீடியோ செய்து மன்னிப்பு கேட்டேன், ”என்று ராவ் ஞாயிற்றுக்கிழமை வளைகுடா செய்களுக்கு தெரிவித்துள்ளார்.