T24 Tamil Media
மத்திய கிழக்கு

கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்னும் நம்பிக்கையில் மெத்தனால் அருந்திய 700 க்கும் மேற்பட்டோர் பலி

கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கை நச்சு மெத்தனால் (methanol) அருந்திய 700 க்கும் மேற்பட்டோர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தொகையானது ஈரானிய சுகாதார அமைச்சினால் இதுவரை வெளியிடப்பட்டதை விட அதிகமான இறப்பு எண்ணிகையாகும்.

சுமார் 200 பேர்வரை மருத்துவமனைகலீல் அனுமதிக்கப்படாமலே இறந்ததுள்ளனர் என்பதால் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டதை விட அதிகமானோர் இறந்துள்ளனர் என ஈரானிய சுகாதார அமைச்சின் ஆலோசகர் ஹொசைன் ஹசானியன் (Hossein Hassanian) தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையின்படி, கடந்த ஆண்டினை விட இவ்வாண்டு சாராய விஷம் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

மொத்தம் 5,011 பேர் மெத்தனால் ஆல்கஹால் விஷம் குடித்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் தெரிவித்துள்ளார். சுமார் 90 பேர் கண் பார்வையை இழந்துவிட்டனர் அல்லது கண் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், கண் பார்வையை இழந்த மக்களின் இறுதி எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் ஹசானியன் தெரிவித்துள்ளார்

மத்திய கிழக்கில் 5,806 இறப்புகள் மற்றும் 91,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களுடன் ஈரான் மிக மோசமான கொரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொண்டுள்ளது.

Related posts

ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது : சவூதி அரசாங்கம்.

T24 News Desk 4

விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை!பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனை.

T24 News Desk 4

ரஷ்யாவில் மேலும் 17,648 பேருக்கு கொரோனா பாதிப்பு!

T24 News Desk 4

ரஷியாவில் அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி தீவிரமடையும் போராட்டம்!

T24 News Desk 4

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது!

T24 News Desk 4

ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக தீவிரமடையும் போராட்டம்!

T24 News Desk 4

ரமலான் பண்டிகையின்போது பொதுமக்கள் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது. சவுதி அரேபியா .

T24 News Desk 4

ரமலானை முன்னிட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செய்த வேலை.

T24 News Desk 4

மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் அபராதம்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more