ஆப்கானிய ஜனாதிபதி மாளிகையில் உள்ள பல ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதை அடுத்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani) சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் இருபது ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக தகவல் வெளியாகின, ஆனால் 19/04/2020 அன்று நியூயார்க் டைம்ஸ் இந்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிய அரசாங்கம் இச்செய்தி குறித்து உத்தியோகபூர்வ கருத்துக்கள் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
70 வயதான திரு கானி 1990 களில் தனது வயிற்றின் ஒரு பகுதியை புற்றுநோயால் இழந்ததாகக் கூறப்படுகிறது.
18/04/2020 சனிக்கிழமையன்று வெளியான ஆப்கானிஸ்தான் அரசாங்க புள்ளிவிவரங்கள் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் ஒட்டுமொத்தமாக 933 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.