இலங்கையின் பிரபல கட்சியான பொதுஜனபெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் கோபத்துக்குள்ளாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கருத்தினால் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு எதிராக பொதுஜன பெரமுனவிற்குள் கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.
தொடர்ந்து, இது தொடர்பில் கலந்துரையாட பொதுஜன பெரமுனவில் உள்ள கட்சித் தலைவர்களை பிரதமர் அழைத்தபோதிலும் நீதிமன்றுக்கு செல்வதால் தன்னால் கலந்து கொள்ள முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.