சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான கஞ்சா யால சரணாலயத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
முப்பது மூட்டைகளில் பொதியிடப்பட்டிருந்த 350 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக ஊவா மாகாண வன ஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்தார்.
இவை விற்பனை செய்ய தயாராகியிருந்த போதே கஞ்சா கைப்பற்றப்பட்டதாக உபுல் இந்திரஜித் குறிப்பிட்டார்.