இன்றையதினம் யாழ்.மிருசுவில் பகுதியில் இராணுவத்தினருக்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் நடவடிக்கையை எதிர்த்து காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
இன்று காலை தொடக்கம் நில அளவையாளர்களை எதிர்த்து ஏ-9 வீதியை வழிமறித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப்போராட்டமானது மாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.