அண்மையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் மூடப்பட்டிருந்த சத்திர சிகிச்சை கூடங்கள் 15ம் திகதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சத்திர சிகிச்சை கூடங்கள் தொற்று நீக்கல் மற்றும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டது.
குறித்த அந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 15ம் திகதி கூடம் மீளவும் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.