நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். அவரும், அவரது குடும்பத்தாரும் கருதுவதுபோல் அவரது உடல்நலன், நிம்மதி, அமைதி மிகவும் முதன்மையானது. நான் அதை விரும்பியே அவரிடம், அரசியல் வேண்டாம் என்ற கருத்தை பலமுறை பதிவு செய்து இருந்தேன்.
நான் கடந்த காலங்களில் ரஜினி மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகன். ஆனால அரசியல் ரீதியாக வரும்போது அவர் மீது கடும் விமர்சனங்களை, கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம். அது அவரையோ, அவரது குடும்பத்தையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.