T24 Tamil Media
இந்தியா

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு!

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 142.55 அடியாக இருந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் 2 ஷட்டர்கள் வழியாக முதலில் 3,000 கனஅடி தண்ணீரும், பின்னர் 3,500 கனஅடியும் திறந்து விடப்பட்டது. காலை 11 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.60 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 114.35 அடியாக உள்ளது.

அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவையாக உள்ளது. அணையில் இருந்து நேற்று 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணி ஆற்றில் உள்ள சுடலைமாடசாமி, கருப்பசாமி மற்றும் அம்மன் கோவில்களையும் வெள்ளம் மூழ்கடித்து சென்றது.

மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் வெள்ளப்பெருக்கு குறையாததால் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more