உள்ளூரில் தயாரிக்கப்பட்ட COVID – 19 தடுப்புமருந்துகளை இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
அவசர பயன்பாட்டுக்காக, இரண்டு கொவிட் தடுப்புமருந்துகளுக்கு இந்தியா அனுமதியளித்திருந்தது.
மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை இம்மாதம் ஆரம்பிப்பதற்கு இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சுமார் 300 மில்லியன் பேருக்கு ஜூலை மாதமளவில் கொரோனா தடுப்புமருந்து வழங்குவதே இந்தச் செயற்றிட்டத்தின் இலக்காகும்.