கொரோனா வைரஸ் தொற்றினை அடையாளப்படுத்த சீனாவிடம் இருந்து அவசரமாகக் கொள்வனவு செய்யப்பட 6.5 இலட்சம் பரிசோதனை உபகரணங்களில் (Rapid testing antibody kits) பெருந்தொகையாவை சரியான முறையில் இயங்காமையால் பல மாநிலங்களில் பரிசோதனை நிறுத்தப்படுள்ளது.
COVID தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் முயற்சிகள் குறித்து புது தில்லியில் நடைபெறும் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், அதிர்ச்சி அளிக்கும் வகையில், சீனாவில் அவசரமாகக் கொள்வனவுசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகளை இடைநிறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் (Indian Council of Medical Research) அறிவுறுத்தப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் அறிவித்தது.
சீன உற்பத்தியாளர்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் கோ. (Guangzhou Wondfo Biotech Co) இந்தியாவுக்கு சுமார் 5 இலட்சம் கருவிகளை விற்பனை செய்தது. இதேபோல், ஜுஹாய் லிவ்ஸன் டயக்னோஸ்டிக் இன்க் (Zhuhai Livzon Diagnostics Inc) 2 இலட்சம் கருவிகளை விற்பனை செய்தது. இந்த இரண்டு உற்பத்தியாளர்களின் கருகளும் தவறான முடிவுகளை தரவல்லது என ஐ.சி.எம்.ஆரால் கண்டறியப்பட்டுள்ளது.