இலங்கையான் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசிமின் கடும்போக்குவாத கருத்துக்களை இணையத்தளங்களில் வௌியிட்டமை, பிரசங்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி மற்றும் திஹாரி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் மூதூரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கட்டாரிலிருந்து ‘வன் உம்மா’ எனும் வாட்ஸப் செயலி ஊடாக சஹரான் ஹாசிமின் கடும்போக்குவாத கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.