மும்பையில் கொரோனா வைரஸ் தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த 3 காவல்துறையினர் மரணமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 52 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள், அதே சமயம், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் இருந்தால், அவர்களும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் நடுத்தர வயதைச் சேர்ந்த மூன்று காவலர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணம் அடைந்த நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த உத்தரவை மும்பை காவல்துறை எடுத்துள்ளது.
அதேபோல மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சுமார் 12 ஆயிரம் காவலர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையும், 20 ஆயிரம் காவலர்களுக்கு சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.