T24 Tamil Media
இந்தியா

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

ஹொக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் (வயது 96) எஸ்.ஆர் பஞ்சாபில் மொஹாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவர் கடந்த 12-ம் தேதி மாரடைப்பு காரணமாக மொஹலியில் உள்ள மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஹொக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் டோசன்ஜ், 95 வயதில் இன்று காலமானார். 1948, 1952 மற்றும் 1956 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் இந்திய ஹொக்கி ஜாம்பவான் பல்பீர் சிங்.

ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் அதிக கோல் அடித்த இச்சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. இதனாலேய இவர் பல்பீர் சிங் சீனியர் என சக வீரர்களால் அழைக்கப்பட்டார்.

இவர் மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக கடந்த மே 8ம் தேதி மொஹாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த உறைவு ஏற்பட்ட பின்னர் மே 18 முதல் அரை கோமா நிலையில் இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் இவர் காலமானதாக மருத்துவமனை இயக்குனர் அபிஜித் சிங் தெரிவித்தார். சிகிச்சையின் போது அவருக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Related posts

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more