கொரோனா தொற்றால் நாடுகள் முடங்கியுள்ள நிலையில் ஹஜ் பயணம் தொடர்பாக சவூதி அரேபியா அரசு எந்தவிதமான தகவலும் வெளியிடாததால் இந்த ஆண்டுக்குரிய ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்கவுள்ளதாக இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் ஹஜ் யார்திரை ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் புனிதப்பயணம் செல்லப் பணம் செலுத்தி இருந்தார்கள்.
இதில் 1.25 லட்சம் பேர் ஹஜ் யாத்திரைக்குழு மூலமாகவும், 47 ஆயிரம் பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமும் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
கொரோனா தொற்றுக் காரணமாகச் சவூதி அரேபிய அரசு மார்ச் 12ஆம் திகதியுடன் ஹஜ்புனிதத்தலங்களை மூடிவிட்டது.
இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் குறித்து எந்த நாட்டுக்கும் சவூதி அரேபியா அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
சவுதி அரேபியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்து ஒரு லட்சத்தை நெருங்கி யுள்ளது. 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயணம் நடக்காது என்று எண்ணி ஏற்கெனவே பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தாங்களாகவே ஹஜ் புனிதப் பயணத் திட்டத்தை கைவிட்டு விட்டன.
இந்தச் சூழலில் இந்த யாத் திரைக்காகத் தாம் பெற்ற பணத் தைத்திருப்பி வழங்குவதாக மகாராஷ்டிரா ஹஜ் யாத்திரை ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.