இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களை நாட்டுக்கே திருப்பிப் பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இந்த விடயத்தில் இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கை முன்வைத்த அனைத்து நிபந்தனைகளுடனும் உடன்பட்டுக்கொண்டதாக அவர்குறிப்பிட்டுளார்
அத்துடன் தாங்கள் வழங்கிய நிபந்தனைகளுக்கு அவர் இணக்கம் தெரிவித்ததுடன்2017 இல் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.