கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள வங்கி ஒன்றில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் தற்கொலைசெய்து கொண்டுள்ளார்
கேரள மாநிலத்தின் கொல்லம் அருகே உள்ள பூதக் குளம் கூட்டுறவு வங்கியில் தற்காலிக ஊழியர் பணி புரிந்து வந்த சத்தியவதி என்பவர் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தபோதே திடீரென தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சத்தியவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தற்காலிகமாக பணி செய்து வந்த சத்தியவதி தன்னை பணிநிரந்தரம் செய்யுமாறு வங்கி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அவர் நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.