T24 Tamil Media
இந்தியா

ரூ.50 லட்சம் நிதியுதவி : அரசு மரியாதை! – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசுக்கெதிரான தடுப்பு பணியில் உயிரிழப்பவர்களின் உடல், முழுமையான அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழகமுதல்வர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் தடுப்பு பணியில் பணியாற்றி வரும் மருத்துவ துறை , போலீசார், உள்ளாட்சி துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களும் வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும்.

கொரோனா தடுப்பு பணியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறையில் இருந்து இறப்பை சந்திக்க நேரிட்டால், அவர்களின் பணிக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில், உயிரிழந்தவர்களின் உடலை பாதுகாப்புடனும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.

கொரோனா தடுப்பு பணியில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இப்பணியில் உள்ள பிற துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்டு உயிரிழக்க நேரிடும் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு உரிய விருதுகளும், பாராட்டு சான்றும் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த மருத்துவரின் உடல் புதைப்பதற்கு எதிராக மக்களால் போராட்டம் நடத்தி அடிதடி நடத்தியதால் அம்புலன்ஸ் உடைக்கப்பட்டு ஊழியர்கள் பெரும் காயத்துக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more