T24 Tamil Media
இந்தியா இலங்கை

முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதிபதி.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் பெரும்பாலான தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

படத்தின் டைட்டில் ‘800’ என்று வெளியாகி, விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கும் நிலையில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் விஜய்சேதிபதி அப்படத்தில் நடிக்கக்கூடாது என்று வலியுறுத்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரரில் படத்தில் நடிப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.

ஆனால், ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்களின் மனதையும் புரிந்துகொண்டு அவர் நடந்தால் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தெரிவித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று இப்படி ஒரு பக்கம் எதிர்ப்பு இருந்தாலும், நடிகை ராதிகா, நடிகர் அரவிந்தன் சிவஞானம் உள்ளிட்டோர் கலைஞனை கலைஞனாக பார்க்க வேண்டும்.

அவனை வைத்து அரசியல் செய்யக்கூடாது. நடிக்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறிவருகிறார்கள்.

ஆனாலும் பெரும்பாலான தமிழர்கள் தன்னை நடிக்கக்கூடாது என்றே சொல்லி வருவதால், 800 படத்தில் இருந்து விலகுவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. தனக்கு நெருங்கிய இயக்குநர்களை அழைத்து அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆலோசனையின் முடிவில் விஜய்சேதுபதி, 800 படத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில்,“நடிகர் விஜய் சேதுபதி மீது அன்பும் கூடுகிறது. தமிழர்களின் மன உணர்வை மதித்தமைக்கு நன்றி’’ என்று இயக்குநர் கீரா தெரிவித்திருப்பதால், 800 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவதாக முடிவெடுத்துவிட்டார் என்பது உறுதியாகிறது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more