கொரோனா வைரசுக்கெதிரான தனிமைப்படுத்தல் சட்டங்களை பெரும் அளவும் அத்துமீறிய இந்தூர், மும்பை, புனே, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தின் பிற இடங்களில் மிகவும் கடுமையான அணுகுமுறை பின்பற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக இந்த பகுதிகளுக்கு நேரடியாகச் செல்வதற்காகவும், நிவாரணம் தொடர்பாக மாநில அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகளை வெளியிடுவதற்கும், மத்திய அரசிடம் நேரடி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக்கவும் “உள்ளக அமைச்சகங்களின் மத்திய குழு (ஐ.எம்.சி.டி) ( Inter-ministerial central teams)” என்னும் சிறப்புக் குழுக்கள் 6 இனை உள்துறை அமைச்சு அமைத்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள இரு இடங்களுக்கு தலா இரண்டு ஐ.எம்.சி.டி.க்கள் வருகை தரும் அதே வேளையில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மதிப்பீடு செய்ய தலா ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் 5 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
ஐ.எம்.சி.டி. குழுக்களில் என்.டி.எம்.ஏ, சுகாதார அமைச்சகம், வேளாண் அமைச்சகம், நிதிச் சேவைத் துறை, மின் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மனிதவள மேம்பாட்டுத் துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை, எய்ம்ஸ், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, உணவு பதப்படுத்தும் அமைச்சகம் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் உள்ளனர்.
“இந்தூர் (எம்.பி.), மும்பை மற்றும் புனே (மகாராஷ்டிரா), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் கொல்கத்தா, ஹவுரா, மெடினிபூர் கிழக்கு, 24 பர்கானாஸ் வடக்கு, டார்ஜிலிங், கலிம்பொங் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி ஆகிய இடங்களில் நிலைமை மிகவும் தீவிரமானது” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் மீறல்கள், முன்னணி சுகாதார நிபுணர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், வங்கிகள், பி.டி.எஸ் கடைகள் போன்றவற்றுக்கு வெளியே மற்றும் சந்தை இடங்களில் சமூக தொலைதூர விதிமுறைகளை முழுமையாக மீறுதல் மற்றும் நகர்ப்புறங்களில் பயணிகளுடன் தனியார் மற்றும் வணிக வாகனங்களின் இயக்கம் போன்ற விடயங்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் மிக அதிகமாகக் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஐ.எம்.சி.டி குழுக்களில் வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தல் / முடக்க நடவடிக்கைகளை அமல்படுத்துதல், அத்தியாவசிய பொருட்களின் வழங்கல், சமூக தொலைவு, சுகாதார உள்கட்டமைப்பின் தயார்நிலை, சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மற்றும் ஏழை மக்களுக்கான நிவாரண முகாம்களின் நிலைமைகள் குறித்த புகார்களில் குழுக்கள் கவனம் செலுத்தும்.