T24 Tamil Media
இந்தியா

மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 19/04/2020 நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

மேலும் “புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்குள்ளான 4 பேர் சிகிச்சையிலிருந்த நிலையில், இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆகக் குறைந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 3,045 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் விதிமுறைகளின்படி, புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் 28 நாட்களுக்கு முடக்கப்படும். கரோனா பரவாமல் தடுக்க நாம் இந்த உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா தொற்று நோய்க்கான மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், மருத்துவக் கவச உடைகள், முகக்கவசங்கள், தேவையான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. மத்திய அரசு தேவைப்படும் அளவுக்கு கொடுக்கவில்லை. அவற்றை மாநில அரசுகளே நேரடியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.

கரோனா தொற்றுக்கான மருத்துவ உபகரணங்களை கொண்டுவர ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இக்கட்டான சூழல் நிலவும் இக்காலகட்டத்தில், மத்திய அரசு மருத்துவ உபகரணங்களுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மாநிலங்கள் மருத்துவ உபகரணங்களை அதிக அளவில் வாங்க ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்” என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more