T24 Tamil Media
இந்தியா

மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு : ஆம்புலன்ஸை மீது தாக்குதல் : 20 பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்றினால் 19/04/2020 அன்று மரணமடைந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ பணியாளர்களை தாக்கியதாக 20 பேரை தமிழகக்காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் இயக்குநர் இரண்டு வாரங்களுக்கு முன் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனிறி 19/04/2020 உயிரிழந்த நிலையில் அவரது உடலைப் புதைப்பதற்காக வேளங்காடு மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுள்ள உடல் என்பதால் அவரது மனைவி மகன் மற்றும் நண்பர்கள் வெகு சிலர் மட்டுமே உடலை எடுத்து சென்றுள்ளனர். அந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கற்கள், கம்பு ஆகியவற்றுடன் வந்து ஆம்புலன்ஸை உடைத்து ஓட்டுநர்களை, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களை தாக்கியதாக உடன் சென்று மருத்துவ்ர் பிரதீப் நியூஸ்18- யிடம் தெரிவித்தார்.

ரத்தம் சொட்ட சொட்ட ஈகா திரையரங்கு வரை ஆம்புலன்ஸை ஓட்டி வந்துள்ளனர். அதற்கு மேல் ஓட்டுநர்களால் ஓட்ட முடியாததால் படுகாயம் அடைந்த அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, அந்த மருத்துவர் PPE பாதுகாப்பு ஆடையை தானே அணிந்து கொண்டு , உடனிருந்த இரண்டு உதவியாளர்களுடன் மீண்டும் ஆம்புலன்ஸ் வேளங்காடு மயானத்துக்கு கொண்டு சென்று சில காவலர்கள் உதவியுடன் அவசரம் அவசரமாக மருத்துவரின் உடலைப் புதைத்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கியதாக 20 பேரை அண்ணா நகர் போலீசார், இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், ஆயுதங்களால் தாக்குதல், சட்டவிரோதமாக தடுப்பில் வைத்து தாக்குதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 19/04/2020 சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள் : கொரோனா வைரஸ் தொற்றினால் மருத்துவர் ஒருவர் தமிழகத்தில் உயிரிழப்பு

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more