T24 Tamil Media
இந்தியா

பணிநீக்கம் செய்தாலோ, சம்பளத்தினைக் குறைத்தாலோ சட்ட நடவடிக்கை!

கொரோனா வைரஸினால் அனைவரும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இக்காலகட்டத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்தாலோ அல்லது சம்பளத்தினைக் குறைத்தாலோ சட்ட ரீதியாக நடவிக்கை எடுக்கப்படும் என இரு சட்டத்தரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் முடக்க காலத்தில் எந்தவொரு ஊழியரையும் பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று இந்திய பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி, வழக்கறிஞர் ராஜேஷ் இனாம்தார் மற்றும் டி.சி. ஷேக் ஆகியோர் புனேவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கும், குர்கானை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கும் கடிதம் மூலமாக எச்சரித்துள்ளனர்.

ஒரு தொற்றுநோய்களின் போது ஊழியர்களை பணிநீக்கம் செய்ததற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என குறித்து நிறுவன உரிமையாளர்களுக்கு அவர்கள் நினைவூட்டினர்.

” உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களை எந்தவொரு தெளிவான மற்றும் சரியான காரணங்களும் இல்லாமல் முடக்க காலத்தில் சட்டவிரோதமாக நிறுத்தியுள்ளீர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், நீங்கள் பல ஊழியர்களுக்கு சம்பளத்தை மறுத்து கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளீர்கள். முதலாளிகளான உங்களின் முடிவு அரசாங்கத்தின் வழிமுறைகளை மீறுவது மட்டுமல்லாமல், மனிதாபிமானமற்றது மற்றும் தண்டனைக்குரியது. தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் பிரிவு 51 மற்றும் 55 ன் கீழ் வழக்குத் தொடரப்படும், மேலும் உங்கள் மீது பிற வேலைவாய்ப்புச் சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்படும், அதற்கான இழப்பீடு வழங்குவதற்கும் பொறுப்பாவீர்கள்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பணிநீக்க அறிவிப்புகளை உடனடியாக ரத்து செய்யுமாறு முதலாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more