T24 Tamil Media
இந்தியா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு / கபசுர குடிநீர் பருகலாம் – தமிழக முதல்வர்

குறிப்பு : இவ்வறிவுறுத்தலானது கொரோனா நோய்க்கான நேரடி சிகிச்சை அல்ல, பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனத் தெளிவுபடுத்தப்படுகிறது

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீரைப் பருகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்திருக்கும் அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது, இதன் ஒருபகுதியாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட் -19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 11 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மூத்த இந்திய மருத்துவர்களும், மூத்த அலோபதி மருத்துவர்களும் இடம்பெற்று, ஆலோசனை செய்து அரசுக்கு தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.

அதில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவமுறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரைகளை வழங்கினார்கள்.

தமிழக முதலமைச்சர் வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று, தமிழ்நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், சிகிச்சை பெற்ற பின் உடல் நலத்தைப் பேணவும் இன்று ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும், உடல் நலம் பேணுவதற்கும், பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இந்த விநியோகத்திலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும், பயனாளிகளும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.இந்த சிறப்புத் திட்டத்தின் வழிமுறைகள், கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது” என தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more